women-anxiety-574x383

 ஆங்கிலப் பாடம் கற்க வந்த 13 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தனியார் வகுப்பு ஆசிரியருக்கு  கடும் நிபந்தனைகளுடன் பிணை

150x728

women-anxiety-574x383தன்னிடம் ஆங்கிலப் பாடம் கற்க வந்த 13 வயது சிறுமியை வகுப்பறையில் வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட 59 வயது தனியார் வகுப்பு ஆசிரியரை கடும் நிபந்தனைகளுடன் நீர்கொழும்பு மேலதிக நீதவான் கபில துஸ்ஸந்த எபிட்டவல உத்தரவிட்டார்.

பத்தாயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா ஒரு இலட்சம் ரூபா  கொண்ட இரண்டு நபர்களின் சரீரப் பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவர் நீர்கொழும்பு தலாதூவ பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபராவார்.

சந்தேக நபர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் கட்டானை பொலிஸ் நிலையத்தில்  ஆஜராக வேண்டும் என பிணை நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டானை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து சந்தேக நபரை மன்றில் ஆஜர் செய்தனர்

( எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 97 posts in News category
Recommended for you
foot ball
13 வயதுக்கு கீழ்பட்ட வயதுப் பிரிவு உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்nயில் நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரி அணி சாம்பியன்

நீர்கொழும்பு சென் மேரிஸ் கல்லூரி நடத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில்  13 வயதுக்கு கீழ்பட்ட வயதுப் பிரிவிற்கான போட்டியில் நீர்கொழும்பு...