herion

இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளை கடத்தி வந்த ஈரான் பிரஜையை 21 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதவான் உத்தரவு

150x728

 

 

இரண்டு கிலோகிராம் ஹெரோயின்  போதைப் பொருளை நாட்டுக்குள் கடத்தி வந்த ஈரான் பிரஜையை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை கொழும்பு போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் வைத்து  மேலதிக விசாரணை செய்யுமாறு  நீர்கொழும்பு பதில் நீதவான்  கே.ஜி.குணதாச  உத்தரவிட்டார்.

herionடிஹானி ஹெல்மர் கார்டன் என்ற ஈரான் பிரஜையே இவ்வாறு தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டவராவார். சந்தேக நபர் கடந்த 14 ஆம் திகதி காலை 9.50 மணிக்கு டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK648   விமானத்தில்  இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளை கடத்தி வந்த போது கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரின் பயணப் பொதி தொடர்பாக சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள் அதனை சோதனை செய்த போது அதில் சூட்சுமமான முறையில் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரின் பயணப் பொதியை அதிகாரிகள் சோதனை செய்தபோது சநதேக நபர் அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்துள்ளார்.பின்னர் சுங்க அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.

ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர் அதிகாரிகள் சந்தேக நபரை விமான நிலைய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பின்னர் சந்தேக நபரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நீரகொழும்ப பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்தபோதே கொழும்பு போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் வைத்து  மேலதிக விசாரணை செய்யுமாறு  நீpர்கொழும்பு பதில் நீதவான்  உத்தரவிட்டார்

( எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 118 posts in News category
Recommended for you
3
 ஒரு மாத காலமாக   பெரியமுல்லையில் தேங்கி கிடந்த குப்பை அகற்றப்பட்டது : பிரதேசவாசிகள் நன்றி தெரிவிப்பு

நீர்கொழும்பு, பெரியமுல்லை லாஸரஸ் வீதியில் கடந்த ஒரு மாத காலமாக அகற்றப்படாமலிருந்த குப்பைகளை நீர்கொழும்பு மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவினர்...