20

இரவு நேரத்தில் வீடொன்றுக்குள் நுழைந்து பெண்னொருவரை பாலியல் வல்லுறவு செய்ய முயன்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு கத்திக்குத்து: நீர்கொழும்பு வைத்தியசாலையில் படுகாயங்களுடன் அனுமதிப்பு   

150x728

20

இரவு நேரத்தில் வீடொன்றுக்குள் நுழைந்து பெண்னொருவரை பாலியல் வல்லுறவு செய்ய முயன்றதாக கூறப்படும் சம்பவம் NHடர்பாக அந்த வீட்டின் உரிமையாளரால் தாக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்  கடுமையான காயங்களுடன் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கட்டானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும்  திருமணமாகாத பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவராவார்.

கட்டானை மிரிஸ்வத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடுமையான வெட்டுக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பாக  சந்தேக நபர் கட்டானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

(நீர்கொழும்பு நிருபர் – எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 97 posts in News category
Recommended for you
foot ball
13 வயதுக்கு கீழ்பட்ட வயதுப் பிரிவு உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்nயில் நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரி அணி சாம்பியன்

நீர்கொழும்பு சென் மேரிஸ் கல்லூரி நடத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில்  13 வயதுக்கு கீழ்பட்ட வயதுப் பிரிவிற்கான போட்டியில் நீர்கொழும்பு...