78

 இரவு வேளையில் மோட்டார் சைக்கிளில் தனியாக பயணிக்கும் ஆண்களிடம் கொள்ளையிட்ட பெண் உட்பட ஐவருக்கு விளக்கமறியல்

150x728

78

 

 

 

 

இரவு வேளையில் மோட்டார் சைக்கிளில் தனியாக பயணிக்கும் ஆண்களிடம் கொள்ளையிட்ட பெண் உட்பட மேலும் நால்வரை எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் கே.ஜி.குணதாச  சனிக்கிழமை (25) உத்தரவிட்டார்.

சீதுவை மூக்கலங்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த  கே.யு. தொன் நிலன்தி செவ்வந்தி என்ற பெண்ணும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஈ.எம்.சுரன்ஞன், பி.ஏ.குசல் சஞ்சீவ, கே.ஏ. ஹர்ச தாரக்க, எம.ருவன் லஹிரு பெரேரா ஆகியோரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்குமாறு   உத்தரவிடப்பட்ட சந்தேக நபர்களாவர்.

ரத்தொழுவை பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எச்.நுவன், கொட்டகல பிரதேசத்தைச் சேர்ந்த பிரதீப் குமார ஆகியோர் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேக நபர்களை சீதுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள பெண்  நவநாகரீகமாக ஆடை அணிந்து கொண்டு

இரவு வேளையில் மோட்டார் சைக்கிளில் தனியாக பயணிக்கும் ஆண்களிடம் சீதுவை பிரதேசத்திற்கு கொண்டு சென்று இறக்கிவிடுமாறு வேண்டுகோள்விடுத்து குறித்த இடத்திற்கு சென்றதும்  அங்கு காத்துநிற்கும் இளைஞர்களுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்த நபரை தாக்கிவிட்டு பணம், செல்லிடத் தொலைபேசி மற்றும் உடைமைகளை கொள்ளையிட்டு வந்துள்ளமை  விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது

கொள்ளை குழுவைச் சேர்ந்த யுவதி உட்பட ஐவரையும் நீர்கொழும்பு பதில் நீதவான் கே.ஜி.குணதாச முன்னிலையில் பொலிஸார் ஆஜர் செய்தபோதே சந்தேக நபர்களை  எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

( எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 118 posts in News category
Recommended for you
3
 ஒரு மாத காலமாக   பெரியமுல்லையில் தேங்கி கிடந்த குப்பை அகற்றப்பட்டது : பிரதேசவாசிகள் நன்றி தெரிவிப்பு

நீர்கொழும்பு, பெரியமுல்லை லாஸரஸ் வீதியில் கடந்த ஒரு மாத காலமாக அகற்றப்படாமலிருந்த குப்பைகளை நீர்கொழும்பு மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவினர்...