82

 இரவு வேளை பணியில் ஈடுபட்;டிருந்த  பொலிஸ் உத்தியோகத்தர்களின் ரிவோல்வரை அபகரித்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு சந்தேக நபர்கள் இருவர் தப்பியோட்டம் கட்டானையில் சம்பவம்

150x728

82கட்டானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டியல பிரதேசத்தில் இரவு வேளையில் கடைமையில் ஈடுபட்;டிருந்த  பொலிஸ் உத்தியோகத்தர்  ஒருவருடைய ரிவோல்வரை அபகரித்துக் அந்த துப்பாக்கியினால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு இனந்தெரியாத நபர்கள் தப்பியோடியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

கட்டானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர்  நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நேர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கட்டியல  பிரதேசத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் சென்று கொண்டிருந்த இரு நபர்களை சோதனை செய்துள்ளனர்.  இதன்போது ஒரு சந்தேக நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அவரை பிடிப்பதற்காக ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் துரத்திச் சென்றுள்ளார்.

மற்றைய சந்தேக நபரும் தப்பிச் செல்ல முற்பட்டபோது அவரை தடுத்து வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தருடன்  அந்த சந்தேக நபர் மல்லுகட்டியுள்ளார். இதன்போது அந்த் பொலிஸ் உத்தியோகத்தரின் ரிவோல்வர் கீழே விழுந்துள்ளது. இதனை எடுத்த சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்தரகள்; மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார். காயமடைந்த இரு பொலிஸ் உத்தியொகத்தர்களும் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை கைது செய்யவும் அபகரித்துச் செல்லப்பட்ட ரிவோல்வரை மீட்கவும்

( எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 97 posts in News category
Recommended for you
foot ball
13 வயதுக்கு கீழ்பட்ட வயதுப் பிரிவு உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்nயில் நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரி அணி சாம்பியன்

நீர்கொழும்பு சென் மேரிஸ் கல்லூரி நடத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில்  13 வயதுக்கு கீழ்பட்ட வயதுப் பிரிவிற்கான போட்டியில் நீர்கொழும்பு...