50

கடந்த நான்கு மாத காலத்தில் நீர்கொழும்பில் 536 டெங்கு நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிப்பு

150x728

50

 

கடந்த நான்கு மாத காலத்தில் நீர்கொழும்பில் 536 டெங்கு நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொது சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

ஜனவரி மாதத்தில் 144 பேரும், பெப்ரவரி மாதத்தில் 47 பேரும், மார்ச் மாதத்தில் 134 பேரும், ஏப்ரல் மாதத்தில் 211 பேரும் டெங்கு காய்யச்சலினால் பாதிக்கப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், தளுபத்தை பிரதேசத்திலேயே அதிக எண்ணிக்கையானோர் பாதிக்கப்படட்டுள்ளதாகவும், இந்த நான்கு மாதக் காலப்பகுதியில் தளுபத்தை பிதேசத்தில் 111 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர்  மேலும் தெரிவித்தனர்.

டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை  அதிகரித்துள்ளதன் காரணமாக ஒரு கட்டிலில் இரண்டு அல்லது மூன்று நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நீர்கொழும்பு பொது சுகாதார பிரிவிற்கு உட்பட்ட நோயாளிகள் தவிர்ந்து பல்வேறு பிரதேசங்களிலிருந்து வரும் நோயாளிகள் இங்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு மாதக் காலப்பகுதியில் டெங்கு காய்யச்சலினால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட மூன்று நோயாளிகள்  சிகிச்சைப் பலனின்றி வைத்தியசாலையில்  இறந்துள்ளனர். அதில் ஒருவர் பிட்டிபனை பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுமியாவார்.

இதேவேளை, வைத்தியசாலையின் ஆறு மாடிக்கட்டடம்  கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றமையினால் இடவசதியின்மை காரணமாக  சிகிச்சைக்காக வரும்  பொது மக்கள், தங்கியிருந்து சிகிச்சைப் பெறும் நோயாளிகள், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும்  வைத்தியர்கள்  பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்

( எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728

There are no comments yet

Why not be the first

Leave a Reply

More 8 posts in Education category
Recommended for you
64
நீர்கொழும்பில் வெசாக் தானசாலைகள் பொது சுகாதார பரிசோதகர்களால் சோதனை

. நீர்கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட  பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள வெசாக் தானசாலைகளை மாநகர சபையின் பொது...