33

 கடற்படை தளபதியினால் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்பஹாவில் ஆர்ப்பாட்டம்

150x728

33ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஓப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த 483 ஊழியர்களையும் நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி துறைமுக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தபோது  கடந்த சனிக்கிழமை (10) கடற்படை தளபதியினாலும் கடற்படை வீர்களினாலும்  அங்கு செய்தி சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கட்கிழமை (12)  முற்பகல் 11 மணியளவில் கம்பஹா ரயில் நிலையம் முன்பாக ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள்  மற்றும் ஊடக செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

34‘அரசு கூறுகின்ற ஊடக சுதந்திரம் எங்கே?’ , ‘அன்றும் தாக்கினார்கள். இன்றும் தாக்குகிறார்கள். எங்கள் பயணத்தை நாங்கள் தொடர்வோம்.’ ‘ஊடக சுதந்திரத்தை காப்பாற்று’, ‘கடற்படை தளபதிக்கு எதிராக நடவடிக்கை எடு’ என்பன போன்ற சுலோக அட்டைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வாரண ஜெயகொடி , கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர் சிசிரகுமார குருப்பு , ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக் குழுவின் அழைப்பாளரும் இணையத்தள ஊடகவியலாளர் சங்கத்தின் அழைப்பாளருமான பிரடி கமகே, ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக் குழுவின் உறுப்பினர் எம்.இஸட்.ஷாஜஹான் ஆகியோர் அங்கு கருத்து தெரிவித்தனர்.

கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்றதைப் போன்று ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் இந்த நல்லிணக்க அரசாங்கத்திலும் ஆரம்பித்திருப்பதாகவும்,  இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் எனவும், ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல் இனியும் தொடரக் கூடாதெனவும் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அங்கு

( எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 97 posts in News category
Recommended for you
foot ball
13 வயதுக்கு கீழ்பட்ட வயதுப் பிரிவு உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்nயில் நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரி அணி சாம்பியன்

நீர்கொழும்பு சென் மேரிஸ் கல்லூரி நடத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில்  13 வயதுக்கு கீழ்பட்ட வயதுப் பிரிவிற்கான போட்டியில் நீர்கொழும்பு...