1

கட்டானையில் நிலவும் குடிநீர் பிரச்சினை தொடர்பாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஸனி பெர்னாந்து புள்ளே மீது மேல் மாகாண சபை உறுப்பினர் ரஜித்த அப்புஹாராச்சி குற்றச்சாட்டு

150x728

 

1

நாட்டில் நிலவும் வரட்சி காரணமாக கட்டானை பிரதேசத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கட்டானை பிரதேச செயலகம் மற்றும் கட்டானை பிரதேச சபை என்பன செயற்படும் விதம் திருப்தியாக இல்லை எனவும் இதற்குக் காரணம் இராஜாங்க அமைச்சர் சுதர்ஸனி பெர்னாந்து புள்ளேயின் தலையீடாகும் எனவும் கட்டானை தேர்தல் தொகுதியை பிரதி நிதித்துவப்படுத்தும் மேல் மாகாண சபையின் ஐக்கிய சுதந்திர முன்னணி உறுப்பினரும், ஒன்றிணைந்த எதிர்கட்சியைச் சேர்ந்தவருமான  ரஜித்த அப்புஹாராச்சி இன்று (2-4-2017) முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

கட்டானையில் அவரது இல்லத்தில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் அவர்  மேலும் தெரிவிக்கையில்,

நான் சொந்த செலவிலும் எனது நலன்விரும்பிகளின்  உதவியுடனுமே கட்டானை பிரதேசத்தில் பவுஸர் மூலமாக தினமும் பொது மக்களுக்கு குடிநீர் வழங்குகிறேன். இராஜாங்க அமைச்சர் சுதர்ஸனி பெர்னாந்து புள்ளே கூறுவது போன்று, அவரது அமைச்சு மூலமாகவோ வேறு வழியிலோ குடிநீரை இலவசமாக பெறவில்லை. கட்டானை  தேர்தல் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் மேல் மாகாண சபை அமைச்சரான லலித் வணிகரத்ன மற்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஸனி பெர்னாந்து புள்ளே ஆகியோர குடிநீர் பிரச்சினையை அரசியலாக்கி இலாபம் தேடுகின்றனர். அவர்கள் அவர்களது ஆதரவாளர்களுக்கே பவுஸர் மூலமாக நீரை வழங்குகின்றனர். நாங்கள் பணம் கொடுத்து பெற்றுக்கொண்டுள்ள பவுஸர் வண்டிகளில் எமது ஸ்டிக்கர்களை ஒடடியுள்ளோம். அரச பவுஸர்களில் அல்ல. காலஞ்சென்ற அமைச்சர் ஜெயராஜ் பெர்னாந்து புள்ளே இன்று  உயிருடன் இருந்திருந்தால், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டிருக்கமாட்டார் எனவும்  அவர் தெரிவித்தார்

( எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 118 posts in News category
Recommended for you
3
 ஒரு மாத காலமாக   பெரியமுல்லையில் தேங்கி கிடந்த குப்பை அகற்றப்பட்டது : பிரதேசவாசிகள் நன்றி தெரிவிப்பு

நீர்கொழும்பு, பெரியமுல்லை லாஸரஸ் வீதியில் கடந்த ஒரு மாத காலமாக அகற்றப்படாமலிருந்த குப்பைகளை நீர்கொழும்பு மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவினர்...