25

 கட்டானையில் வயோதிப் பெண் ஒருவரின் சடலம் பாழடைந்த காணியிலிருந்து மீட்பு

150x728

25கட்டானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டானை குவன்வத்தை வீதியில் அமைந்துள்ள வெற்றுக் காணியிலிருந்து பெண் ஒருவரின் சடலத்தை கட்டானை பொலிஸார் இன்று முற்பகல் மீட்டுள்ளனர்.

கட்டானை குவன்வத்தை வீதியில் வசிக்கும் ரூபா சந்ர லதா  என்ற 73 வயது மதிக்கத்தக்க ஒரு பி;ள்ளையின் தாயாரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

குறித்த பெண் இறந்து இரண்டு நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.  சடத்திலிருந்து இரத்தம்  வெளியாகியுள்ள நிலையில் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

சடலமாக மீட்கப்பட்ட வயோதிபப் பெண்ணுக்கு ஒரு மகன் உள்ளார். மகள் வெளிநாட்டில் தொழில் செய்து வருகிறார். குறித்த பெண் தனது சகோதரனுடன் (49 வயது) சடலமாக மீட்கப்பட்ட காணிக்கு அடுத்ததாகவுள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார். அவருக்கு அயலவர்கள் உதவி புரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் குறித்த பெண் கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளார்.

சடலாமாக மீட்கப்பட்ட காணிக்கு அடுத்ததாகவுள்ள வீட்டில் உள்ளவர்கள் தமது அயற் காணியில் பெண்  ஒருவர் சடலமாக இருப்பதை இன்று(6) கண்டு  பொலிஸ் 119 இலக்கத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கட்hனை பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சடலத்தை  ஒப்படைத்துள்ளனர்.

சடலம் அழுகியிருந்துடன் சடலம் காணப்பட்ட இடத்தில் இரத்தம் அதிகளவில் காணப்பட்டது.

சம்பவம் தொடர்பாக கட்டானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜகத் சேனாரத்ன தலைமையிலான  குழுவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

( எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728

There are no comments yet

Why not be the first

Leave a Reply

More 62 posts in News category
Recommended for you
ac2
 நீர்கொழும்பு  தளுவகொட்டுவை பிரதேசத்தில் வாகன விபத்து: இரண்டு கார்களுக்கு சேதம்

நீர்கொழும்பு  - சிலாபம் பிரதான வீதியில் தளுவகொட்டுவை பிரதேசத்தில் இன்று மாலை 4 மணியளவில் வாகன விபத்தொன்று இடம்பெற்றது. திருமண...