84

கட்டானை காட்டுப் பகுதியில்  பரிதாபகரமான  நிலையில் வசித்து வந்த ஏழு பேர்  அடங்கிய குடும்பம் பொலிஸாரால் கண்டு பிடிப்பு  

150x728

 

 

கட்டானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்கஸ் சந்தி , களுவரிப்புவ பிரதேசத்தில் ஓடை அருகில் காட்டுப் பகுதியில்  பரிதாபகரமான நிலையில் வசித்து வந்த ஏழு பேர்  அடங்கிய குடும்பமொன்றை கட்டானை பொலிஸார்  நேற்று வியாழக்கிழமை (29) கண்டுபிடித்துள்ளனர்.

கட்டானை பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து அந்த பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் எஸ்ஏ.டி.ஏ. சமன்மலி, பொலிஸ் கான்ஸடபிள திலீப நுவன் குலரத்ன மற்றும் அந்த பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறிப்பிட்ட இடத்தை சோதனை செய்த போது அநாதவரான நிலையில் இருந்த குடும்பத்தை கண்டு பிடித்துள்ளனர்.

போதிய  உணவின்மை, அணிய ஆடை இன்மையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் அழுக்கடைந்த ஆடைகளுடன் இந்த குடும்பத்தை பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.

குடும்பத்தில் பெற்றோர் மற்றும் ஐந்து பிள்ளைகள் உள்ளனர். தந்தையின் வயது 51 எனவும் தாயின் வயது 34 எனவும் அந்த பெற்றோர் தெரிவித்துள்ளனர். குடும்பத்தின் மூத்த மகளின் வயது 17எனவும், மூத்த மகனின் வயது 14 எனவும் ஏனைய இரு ஆண் பிளிளைகளின் வயது  7 மற்றும் 9 வயது எனவும் கடைசி பெண் பிள்ளையின் வயது  இரண்டரை வயது எனவும் அந்த பெற்றோர் பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளனர்.

கட்டானை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட இந்த குடும்பத்திற்கு தேவையான உணவு உடைகள் வழங்கப்பட்ட பின்னர் பொலிஸார் அவர்களை நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில நான்கு பிள்ளைகளையும் சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் இரண்டில்; ஒப்படைக்கவும், இரண்டரை வயது குழந்தையை பிணையாளி ஒருவரின் பொறுப்பின் கீழ் தாயாரிடம்; ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த தாயின் தாயார் (பாட்டி) அந்த குழந்தையை பொறுப்பேற்றதை அவதானிக்க முடிந்தது.

84

குடும்பத் தலைவனின் கால்களில் ஒன்று உடைந்துள்ளது. அதன் காரணமாக தொழில் செய்ய முடியாத நிலையில் அவர் உள்ளார். தற்போது இந்த குடும்பத்திற்கு மூன்று இடங்களில் வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு உதவ முன்வரும் நல் உள்ளம் படைத்தவர்கள்  மற்றும் அமைப்புக்கள் கட்டானை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினருடன் தொடர்பு கொள்ளலாம்.

 

150x728
More 1 posts in Life Style category
Recommended for you