91

 கட்டானை பன்சல சந்தி பிரதேசத்தில் இரகசியமான முறையில் இயங்கி வந்த  சட்டவிரோத கசிப்பு தயாரிப்பு நிலையம் சுற்றிவளைப்பு: ஒருவர் கைது 4 இலட்சம் ரூபா பெறுமதியான கசிப்பு மீட்பு

150x728

91கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டானை, மடம்பெல்ல, பன்சல சந்தியில் கைவிடப்பட்ட கட்டிடமொன்றில் இரகசியமான முறையில் இயங்கி வந்த  சட்டவிரோத கசிப்பு தயாரிப்பு நிலையம் ஒன்றை இன்று (29)  வியாழக்கிழமை கட்டானை பொலிஸார் சுற்றி வளைத்து 4 இலட்சம்  ரூபா பெறுமதியான கோடா, நான்கு கேஸ் சிலின்டர்கள், கலன்கள் மற்றும் பரல்கள் என்பவற்றை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

89ட்டானை, தெல்கஸ் சந்தி பிரதேசத்தைச் சேர்ந்த லிங்கொட்டகே டியுட்டர் பெர்னாந்து (53 வயது) என்பவரே கைது செய்யப்பட்டவராவார்.

கைவிடப்பட்ட கட்டிடத்தில் குழிகள் தோண்டி  10 பரல்களில் கசிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் கோடா மறைத்து  வைக்கப்பட்டடிருந்தது. பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து குறித்த இடத்தை சுற்றிவளைத்து சந்தேக நபரை கைது செய்த பொலிஸார்,  பரல்களில் மறைத்து வைக்கப்பட்ட கசிப்பை மீட்டனர்.

குறித்த காணியின் உரிமையாளர் வெளிநாட்டில் வசிப்பவராவார். அவர் அந்த காணியை பார்த்துக் கொள்வதற்காக கைது செய்யப்பட்ட நபரை பொறுப்பாக வைத்துள்ளார். சந்தேக நபர் குடும்பத்துடன் அந்த காணியில்  உள்ள சிறிய வீடொன்றில் வசித்து வந்துள்ளார் என விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

90இந்த சட்டவிரோத கசிப்;பு தயாரிப்பு நிலையம்  தாகொன்ன பிரதேசத்தைச் சேர்ந்த பாரிய அளவில் கசிப்பு வியாபாரம் செய்யும்  நபர் ஒருவரினால் நடத்தப்பட்டுள்ளதாக பொலிhர சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சந்தேக நபரை மன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜகத் சேனாரத்னவின் ஆலோசனையின் பேரில் பொலிஸ் சார்ஜன்ட்  சரத் நிஸ்ஸங்க, கான்ஸடபிள்களான லஹிரு சத்துரங்க, ஜகத் பண்டார, சசிக்க இந்துனில், ஆகியோர் சுற்றி வளைப்பை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் மறைத்து வைக்கப்பட்ட கசிப்பை மீட்டுள்ளனர்

( எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 97 posts in News category
Recommended for you
foot ball
13 வயதுக்கு கீழ்பட்ட வயதுப் பிரிவு உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்nயில் நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரி அணி சாம்பியன்

நீர்கொழும்பு சென் மேரிஸ் கல்லூரி நடத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில்  13 வயதுக்கு கீழ்பட்ட வயதுப் பிரிவிற்கான போட்டியில் நீர்கொழும்பு...