6

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் நீர்கொழும்பு வலயத்தில் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரிக்கு முதலாமிடம்

150x728

 

62016 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி  நீர்கொழும்பு கல்வி வலயத்தில்  உள்ள பாடசாலைகளில் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி  முதலாமிடத்தைப் பெற்றுள்ளது.

 இந்தப் பாடசாலையிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 89 சதவீதமானோர் உயர்தரத்தில் கல்வி கற்பதற்கு தகுதி பெற்றதன் மூலமாக  வலயத்தில் உள்ள மாகாண  மற்றும் தேசிய பாடசாலைகளோடு ஒப்பிடுகையில்; விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி  முதலாமிடத்தைப் பெற்றுள்ளதாக கல்லூரி அதிபர் புவணேஸ்வர ராஜா   தெரிவித்தார்.

நீர்கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள மாகாண  மற்றும் தேசிய பாடசாலைகளின் பெறுபேறுகளை பகுப்பாய்வு செய்ததன் அடிப்படையில்; நீர்கொழும்பு ஹரிச்சந்திரா தேசிய பாடசாலை 88.2 சத வீத சித்தியுடன் இரண்டாமிடத்தையும், நிவ்ஸ்டட் மகளிர் கல்லூரி 84.78 சத வீத சித்தியுடன் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பெற்ற பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாகும்

( எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 8 posts in Education category
Recommended for you
64
நீர்கொழும்பில் வெசாக் தானசாலைகள் பொது சுகாதார பரிசோதகர்களால் சோதனை

. நீர்கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட  பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள வெசாக் தானசாலைகளை மாநகர சபையின் பொது...