152

 கிம்புலாபிட்டியவில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து: ஒருவர் படுகாயம்  

150x728

  153  கட்டானை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிம்புலாபி;ட்டிய பிரதேசத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையொன்றில் இன்று வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற வெடி விபத்தில் இளைஞர் ஒருவர் கடும் தீக்காயங்களுக்கு உள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ‘சுப்பர் டைகர்’ என்ற பெயர் உடைய பட்டாசு தொழிற்சாலையிலேயே இந்த வெடி விபத்து இடம்பெற்றுள்ளது.

பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்த ரவி என்ற (18 வயது) இளைஞரே சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவராவார்.

இந்த வெடிப்புச் சம்பவத்தில் பட்டாசு தொழிற்சாலையின் அருகில் உள்ள கட்டிடங்கள் சிலவற்றுக்கும் சேதம் எற்பட்டுள்ளதுடன் பட்டாசு தொழிற்சாலைக்கும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.  சேத விபரம் இதுவரை கணக்கெடுக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜகத் சேனாரத்னவின் மேற்பார்வையின் கீழ்  உப பொலிஸ் பரிசோதகர் ஜயதிலக்க, பொலிஸ் கான்ஸ்டபிள் சஜித் நாலக்க ஆகியோர் சம்பவம் தொடர்பாக

(எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 97 posts in News category
Recommended for you
foot ball
13 வயதுக்கு கீழ்பட்ட வயதுப் பிரிவு உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்nயில் நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரி அணி சாம்பியன்

நீர்கொழும்பு சென் மேரிஸ் கல்லூரி நடத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில்  13 வயதுக்கு கீழ்பட்ட வயதுப் பிரிவிற்கான போட்டியில் நீர்கொழும்பு...