6

   கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தையிட்டு பொது சுகாதார பிரிவினர் நீர்கொழும்பு நகரில் உணவகங்களில் திடீர் சோதனை நடவடிக்கை

150x728

7 கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தையிட்டு பொது மக்களின் நலன் கருதி நீர்கொழும்பு நகரில் உள்ள உணவகங்களில் நீர்கொழும்பு  மாநகர சபையின் பொது சுகாதார பிரிவினர் திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது சுகாதாரத்திற்கு பொருத்தமற்ற விதத்தில் உணவகங்களை நடத்தி வந்த மற்றும் உணவுப் பொருட்களை விற்;பனை செய்து வந்த   கடை உரிமையாளர்களுக்கு எதிராக பொது சுகாதார பிரிவினர்   வழக்குத் தொடர நடவடிக்கை எடுத்தனர்.

நேற்று சனிக்கிழமை  (3) நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியில்  அமைந்துள்ள உணவகங்களில் சோதனை நடவடிக்கையை மேற்கொள்வதை படங்களில் காணலாம்.

( எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 79 posts in News category
Recommended for you
 38 வருட கால சேவையிலிருந்து ஓய்வுபெறும் நீர்கொழும்பு கோட்டக் கல்விப் பணிப்பாளருக்கு பிரியாவிடை

கல்வித்துறையில் 38 வருட காலம் பணியாற்றி பல்வேறு பதவிகள் வகித்து சேவையிலிருந்து ஓய்வுபெறும் நீர்கொழும்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜி.ஏ.ஏ....