49

குளத்தில் மீன் பிடிப்பதற்காக நிலத்தை தோண்டி புழுக்களை பெறுவதற்கு முயற்சி செய்த நபருக்கு அகப்பட்ட  கை குண்டு  

150x728

48தாகொன்ன குளத்தில் மீன் பிடிப்பதற்காக நிலத்தை தோண்டி புழுக்களை பெறுவதற்கு முயற்சி செய்த நபர் ஒருவர் குண்டு போன்ற ஒன்றை கண்டெடுத்த சம்பவம்  தொடர்பாக கட்டானை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து கட்டானை குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் பிரதேசத்தில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையை அடுத்து பிளாஸ்ரிக் போத்தலில் பாதுகாப்பாக அடைத்து வைக்கப்பட்டிருந்த கை குண்டு ஒன்றை இன்று கண்டெடுத்துள்ளனர்.

 இந்த கை குண்டு குற்றச் செயல் ஒன்றை புரிவதற்காக சில மாதங்களுக்கு முன்னர் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த கை குண்டை மறைத்து வைத்த நபரை கைது செய்வதற்கு கட்டானை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

 

 

(நீர்கொழும்பு நிருபர் – எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 79 posts in News category
Recommended for you
 38 வருட கால சேவையிலிருந்து ஓய்வுபெறும் நீர்கொழும்பு கோட்டக் கல்விப் பணிப்பாளருக்கு பிரியாவிடை

கல்வித்துறையில் 38 வருட காலம் பணியாற்றி பல்வேறு பதவிகள் வகித்து சேவையிலிருந்து ஓய்வுபெறும் நீர்கொழும்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜி.ஏ.ஏ....