61

கொச்சிக்கடை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத கசிப்பு தயாரிப்பு விநியோக நிலையங்கள் சுற்றிவளைப்பு : இருவர் கைது

150x728

 

61

கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு பிரதேசங்களில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கசிப்பு விநியோக நிலையம் ஒன்றையும் , கசிப்பு தயாரிப்பு நிலையம் ஒன்றையும் கொச்சிக்கடை குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் சுற்றிவளைத்து சந்தேக நபர்களான  ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் கைது செய்துள்ளதுடன் சட்டவிரோத மதுபானத்தையும் , மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.  கொச்சிக்கடை ஜனபத மாவத்தையில் இயங்கி வந்த  கசிப்பு விநியோக நிலையம் இடியப்பம்  விற்பனை செய்யும் போர்வையில் நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்த இடியப்ப விற்பனை நிலையத்தில்  விற்பனை செய்வதற்காக தயாராக வைக்கப்பட்டிருந்த 70 கசிப்பு போத்தல்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் ஜே. சந்ரசிறி என்ற சந்தேக நபரையும்  சனிக்கிழமை (14) கைது செய்துள்ளனர்.

 62

 

வெலிஹேன வேல்யாய பிரதேசத்தில்  இயங்கி வந்த சட்ட விரோத கசிப்பு தயாரிப்பு நிலையத்தில் 90 கசிப்பு போத்தல்களையும் , 10 கோடா பரல்களையும் , கேஸ் சிலின்டர் , கேஸ் அடுப்பு  என்பவற்றையும் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (15) கைப்பற்றியுள்ளனர்.

நீர்கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பியலால் தசநாயக்கவின் ஆலோசனையின் பேரில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் லலித் ரோஹனவின் வழிகாட்டலில் கொச்சிக்கடை பொலிஸ் நிலைய  பதில் பொறுப்பதிகாரி எம்.மவுசுன் தலைமையில் குற்றத் தடுப்புப் பிரிவினர்  சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

சந்தேக நபர்களை மன்றில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளன

( எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 118 posts in News category
Recommended for you
3
 ஒரு மாத காலமாக   பெரியமுல்லையில் தேங்கி கிடந்த குப்பை அகற்றப்பட்டது : பிரதேசவாசிகள் நன்றி தெரிவிப்பு

நீர்கொழும்பு, பெரியமுல்லை லாஸரஸ் வீதியில் கடந்த ஒரு மாத காலமாக அகற்றப்படாமலிருந்த குப்பைகளை நீர்கொழும்பு மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவினர்...