39

 கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்திற்காக கடற்பகுதியில்  மணல் அகழ்வதை நிறுத்துமாறு வற்புறுத்தி மீனவர்கள் வீதியை மறித்தது போராட்டம்

150x728
36கொழும்ப துறைமுக நகர வேலைத்திட்டத்திற்காக (போர்ட் சிட்டி) உஸ்வெட்ட கொய்யா முதல் கொச்சிக்கடை வரையிலான கடற்பகுதியில்  மணல் அகழ்வதை (தோண்டி எடுப்பதை) நிறுத்துமாறு வற்புறுத்தி இன்று திங்கட்கிழமை (17) காலை முதல்  மீனவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தியதுடன் கொழும்பு – சிலாபம் பிரதான வீதியை மறித்து மறியல் போராட்டம் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உஸ்வெட்ட கொய்யா முதல் கொச்சிக்கடை வரையிலான பிரதேசங்களைச் சேர்ந்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கத்தோலிக்க மதத் தலைவர்கள்  மற்றும் 1500 இற்கும் மேற்பட்ட மீனவர்கள்  பங்குபற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நகர மத்தியில் வீதிகளில்   எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட அட்டடைகளை ஏந்தியவாறு பேரணியாகச் சென்றதுடன் எதிர்ப்பு கோசங்களையும் எழுப்பினர். புpன்னர் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்திற்காக கடல் பகுதியில்  மணல் அகழ்ந்தெடுக்கபடுவதன் காரணமாக கரையோரங்களில் உள்ள மணல் கடலுக்கு இழுத்துச் செல்லப்படும் எனவும், இதன் காரணமாக மீன்கள் அழிவடைவதுடன்; மீன் குஞ்சுகள் பாதிக்கபுடும் எனவும், வெகு விரைவில் மீன் உற்பத்தி குறைந்துவிடும் எனவும்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதுதொடர்பாக  மீனவர் சங்க பிரதிநிதி ஒருவர் தெரிவிக்கையில்,

இந்த பிரச்சினை தொடர்பாக அரசாங்கத்துடன்  பேச்சுவார்தi;த நடத்த வேண்டுகோள் விடுத்துள்ளளோம். இதுவரை பதில் கிடைக்கவில்லை. அரசாங்கமோ அல்லது உரிய தரப்பினரோ  எமக்கு உரிய பதில் தராவிடில் சாகும் வரை போராட்டம் நடத்துவோம் என்றார்.

இதேவேளை, மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் வீதிகளை மறித்து போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கும் நீதிமன்ற உத்தரவையும் மீறி  கொழும்பு – சிலாபம் பிரதான வீதியை மறித்து பிற்பகல் வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

(நீர்கொழும்பு நிருபர் – எம்.இஸட்.ஷாஜஹான்)

 

 

150x728
More 118 posts in News category
Recommended for you
3
 ஒரு மாத காலமாக   பெரியமுல்லையில் தேங்கி கிடந்த குப்பை அகற்றப்பட்டது : பிரதேசவாசிகள் நன்றி தெரிவிப்பு

நீர்கொழும்பு, பெரியமுல்லை லாஸரஸ் வீதியில் கடந்த ஒரு மாத காலமாக அகற்றப்படாமலிருந்த குப்பைகளை நீர்கொழும்பு மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவினர்...