44

 சட்டவிரோதமாக கடல் வழியாக நிவுஸிலாந்து செல்ல முயன்ற 9 பேர் கைது

150x728

 

44சட்டவிரோதமாக கடல் வழியாக நிவுஸிலாந்து செல்ல முயன்ற 9 பேரை  நீர்கொழும்பு சட்டத்தை நிலை நிறுத்தும் பிரிவு  பொலிஸார் இன்று வியாழக்கிழமை (16) அதிகாலை  நீர்கொழும்பு அக்கரபனஹ , வின்சன் பார்க் பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

 

நீர்கொழும்பு சட்டத்தை நிலை நிறுத்தும் பிரிவு   பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து நீர்கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பியலால் தசநாயக்கவின் ஆலோசனையின் பேரில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் லலித் ரோஹனவின் வழிகாட்டலில் சட்டத்தை நிலை நிறுத்தும்பிரிவு பொலிஸார் இரகசிய நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன் அடிப்படையில் இன்று அதிகாலை அக்கரபனஹ , வின்சன் பார்க் பிரதேசத்திற்கு  வந்த முச்சக்கர வண்டியை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டபோது அதில் பயணித்தவர்கள் சட்டவிரோதமாக நிவுஸிலாந்து செல்வதற்காக வின்சன் பார்க் பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு வந்தமை தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அந்த வீட்டில் தேடுதல் மேற்கொண்டபோது அங்கு மேலும் ஆறு பேர்  சட்டவிரேதமாக நிவுஸிலாந்து செல்வதற்காக தயாராக இருந்தமை கண்டு பிடிக்கப்பட்;டது.46

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஒன்பது பேரில் மூவர் மட்;டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். ஏனைய ஆறு பேர் நீர்கொழும்பு, சிலாபம், மாரவில ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். சந்தேக நபர்கள் 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைபட்டவர்களாவர். .இவர்களில் சிலர் சட்டவிரோதமாக நிவுஸிலாந்து செல்ல முயன்றவர்களாவர். கைது செய்யப்பட்ட சிலர் அங்கு சென்று தொழில் புரிவதற்;காக மீனவர்களுக்கான அடையாள அட்டைகளைப் பெற்றுள்ளனர்.  சட்டவிரோதமாக கடல் வழியாக நிவுஸிலாந்து செல்வதற்காக  சந்தேக நபர்கள் தலா 3 இலட்சம் ரூபா பணத்தை சட்ட விரோத கடத்தல்காரர் ஒருவருக்கு கொடுத்துள்ளனர்.

மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த இந்திக மென்டிஸ் என்ற நபரே சட்டவிரோத ஆட்கடத்தலை மேற்கொண்டுள்ள சந்தேக நபர் என்பது விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. குறித்த நபர் அதற்கு முன்னரும் நபரே சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வழக்கு தொடரப்படரவ் எனவும், பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செயயப்பட்ட சந்தேக நபர்களை மாத்தறையிலிருந்து வரும் பெரிய படகொன்றில் நிவுஸிலாந்து செல்வ தயாராக இருந்துள்ளனர். இவர்களை சிறய படகொன்றில் ஏற்றிச் சென்று இடையில் மாத்தறையிலிருந்து வரும் பெரிய படகில் ஏற்றுவது ஆட்கடத்தல்காரர்களின் திட்டமாக இருந்துள்ளமை விசாரணைகளின் போது மேலும் தெரிய வந்துள்ளது.

45சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார் முச்சகக்ர வண்டி ஒன்றையும், படகில் செல்லும் போது சமைத்து உண்பதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 17 நபட்களுக்கு தேவையான உலர் உணவு பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்களை மேலதிக விசாரணைக்காக கட்டனை பொலிஸாரி;டம் ஒப்படைக்கவுள்ளதாகவும், இது தொடர்பாக குற்றப்புலனாய்வு  பொலிஸார் தனியாக விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும் சட்டத்தை நிலை நிறுத்தும் பிரிவு  பொலிஸார் தெரிவித்தனர்.

 

நீர்கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பியலால் தசநாயக்கவின் ஆலோசனையின் பேரில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் லலித் ரோஹனவின் வழிகாட்டலில் சட்டத்தை நிலை நிறுத்தும் பிரிவின் பொறுப்பதிகாரி  பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.ஆர்.ஏ. ஜி. மனோகர, பொலிஸ் பரிசோதகர்களான  எம். ரஹுப், எச்.எம்.சந்தன,  டெனி பெரேரா, கான்ஸ்டபிள்களான அமல், ஜயசிங்க , சமித்  ஜயசேகர ஆகியோர்  இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்

( எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 118 posts in News category
Recommended for you
3
 ஒரு மாத காலமாக   பெரியமுல்லையில் தேங்கி கிடந்த குப்பை அகற்றப்பட்டது : பிரதேசவாசிகள் நன்றி தெரிவிப்பு

நீர்கொழும்பு, பெரியமுல்லை லாஸரஸ் வீதியில் கடந்த ஒரு மாத காலமாக அகற்றப்படாமலிருந்த குப்பைகளை நீர்கொழும்பு மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவினர்...