unnamed

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 7500 வெளிநாட்டு சிகரட்டுக்களை கைப்பற்றல்: ஒருவர் கைது

150x728

unnamedசட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட  7500 வெளிநாட்டு சிகரட்டுக்களை வைத்திருந்த நபர் ஒருவரை  நீர்கொழும்பு  பிராந்நிய பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த ஊழல் ஒழிப்புப் பிரிவு பொலிஸார் இன்று (19) வெள்ளிக்கிழமை பிற்பகல் கைது செய்துள்ளனர்

தளுபத்தை பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்  இந்த சிகரட்டுக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட சிகரட்டுக்களின் பெறுமதி இரண்டு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமானதாகும் என பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர் தளுபத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

நீர்கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பியலால் தசநாயக்கவின் ஆலோசனையின் பேரில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் லலித் ரோஹனவின் வழிகாட்டலில் ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி அயேஸ் பெரேராவின் தலைமையில் பொலிஸ் பரிசோதகர்களான விஜயரத்ன, கான்ஸ்டபிள்களான சேனாரத்ன, ரத்நாயக்க, மகேஸ், ஆஜித் ஆகியோர் சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் வெளிநாட்டு சிகரட்டுக்களையும் கைப்பற்றியுள்ளனர்

(- எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 118 posts in News category
Recommended for you
3
 ஒரு மாத காலமாக   பெரியமுல்லையில் தேங்கி கிடந்த குப்பை அகற்றப்பட்டது : பிரதேசவாசிகள் நன்றி தெரிவிப்பு

நீர்கொழும்பு, பெரியமுல்லை லாஸரஸ் வீதியில் கடந்த ஒரு மாத காலமாக அகற்றப்படாமலிருந்த குப்பைகளை நீர்கொழும்பு மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவினர்...