tokyo-traffic-1585x1050

ஜப்பானில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 பேர் பலத்த பாதுகாப்பு மத்தியில் விசேட விமானத்தில் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைப்பு

150x728

-(நீர்கொழும்பு நிருபர் – எம்.இஸட்.ஷாஜஹான்)

ஜப்பானில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 பேர் பலத்த பாதுகாப்பு மத்தியில் விசேட விமானத்தில்  நாட்டுக்கு திருப்பி  அனுப்பி வைப்பு

67

பல்;வேறு காரணங்களுக்காக ஜப்பானுக்குச் சென்று  சட்ட ரீதியான விசா இன்றி அங்கு தங்கியிருந்த 30 இலங்கையர்கள் பலத்த பாதுகாப்பு மத்தியில் விசேட விமானத்தில்  நாட்டுக்கு திருப்பி  அனுப்பப்பட்டு இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

ஜப்பான் ஹனிடா விமான நிலையத்திலிருந்து ஜப்பான் விமான சேவைக்கு சொந்தமான ஜி.எல். 8835 இலக்கமுடைய விமானத்தில் அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்களில் மூன்று பெண்கள் அடங்குகின்றனர்.

இந்த விமானத்தில் மொத்தமாக 67 பேர் வந்தனர். இவர்களின் பாதுகாப்புக்காக வந்தவர்களும் , மொழிபெயர்;ப்பாளர் ஒருவரும் . வைத்தியர ஒருவரும்  அந்த விமானத்தில் வந்த ஏனையோராவர்.

இவ்வாறு  திடீரென்று திருப்பி அனுப்பப்பட்டவர்கள்  இலங்கையிலிருந்து ஜப்பான் சென்று சட்ட  விரோதமான முறையில்  நீண்ட காலம் அங்கு தங்கியிருந்தவர்களாவர்.

விமான நிலைய புலனாய்வு திணைக்கள அதிகாரிகள்,  விமான நிலைய புலனாய்வுப் பிரிவினர் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட குழுவினரை விசாரணை செய்வதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

150x728
More 118 posts in News category
Recommended for you
3
 ஒரு மாத காலமாக   பெரியமுல்லையில் தேங்கி கிடந்த குப்பை அகற்றப்பட்டது : பிரதேசவாசிகள் நன்றி தெரிவிப்பு

நீர்கொழும்பு, பெரியமுல்லை லாஸரஸ் வீதியில் கடந்த ஒரு மாத காலமாக அகற்றப்படாமலிருந்த குப்பைகளை நீர்கொழும்பு மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவினர்...