65

 நின்ஜா உடை அணிந்து வீடொன்றின் கூரை வழியாக நுழைந்த பெண்  நீர்கொழும்பு பொலிஸாரால் கைது

150x728

ஆங்கில திரைப் படமொன்றில்; கதா நாயகன் தோன்றும்  நின்ஜா உடை அணிந்து  நீர்கொழும்பு  குடபாடுவபிரதேசத்தில் உள்ள வீடொன்றின் கூரை வழியாக நுழைந்த பெண்  ஒருவரை நீர்கொழும்பு குற்றத் தடுப்புப்பிரிவு பொலிஸார் நேற்று செவ்வாயக்கிழமை (21) கைது செய்துள்ளனர்.

கொச்சிக்கடை உடங்காவை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய  கயான் ரொஸானி என்ற பெண் ஒருவரேகைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபராவார்.

அதிகாலை வேளையில் வீட்டிற்குள் நுழைந்த சந்தேக நபரான பெண் அங்கு உறங்கிக் கொண்டிருந்த  பெண்பிள்ளை ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து சப்தமிட வேண்டாம் என அச்சுறுத்தியுள்ளார். ஆயினும்அச்சமடைந்த அந்த பிள்ளை சப்தமிடவே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் உடனே எழுந்து சந்தேகநபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேக நபர் திருடுவதற்காக வந்த குடாபாடுவ பிரதேசத்தில் உள்ள குறித்த வீட்டிற்கு அருகில் இதற்குமுன்னர் வாடகைக்கு வீடொன்றை பெற்று வசித்தவர் எனவும் , அந்த வீட்டார் வட்டிக்கு பணம்வழங்குபவர்கள் எனவும் விசாரணைகளின்போது மேலும் தெரிய வந்துள்ளது.

கணவனை பிரிந்து வாழும் குறித்த பெண், போதைப் பொருளுக்கு அடிமையாக இருக்கலாம் என  சந்தேகிக்கும் பொலிஸார்  சந்தேக நபர் திருட்டுச் சம்பவங்களுடன் ஏற்கனவே தொடர்புபட்டவரா? எனவிசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலதிக விசாரணையின் பின்னர் சந்தேக நபரை மன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார்தெரிவித்தனர்

( எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 118 posts in News category
Recommended for you
3
 ஒரு மாத காலமாக   பெரியமுல்லையில் தேங்கி கிடந்த குப்பை அகற்றப்பட்டது : பிரதேசவாசிகள் நன்றி தெரிவிப்பு

நீர்கொழும்பு, பெரியமுல்லை லாஸரஸ் வீதியில் கடந்த ஒரு மாத காலமாக அகற்றப்படாமலிருந்த குப்பைகளை நீர்கொழும்பு மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவினர்...