103

நீர்கொழும்பில் இரு பொலிஸார் விபத்தில் மரணமான சம்பவம்: கைது செய்யப்பட்ட கார் சாரதிக்கு நவம்பர் 25 வரை தொடர்ந்து விளக்கமறியல்

150x728

dscn0357273 ஆம் இலக்க பஸ் பயணிக்கும் நீர்கொழும்பு – ஜா-எல வீதியில் அதிக மதுபோதையில் வாகனத்தை அதிக வேகத்தில் பந்தயத்திற்கு செலுத்தி நீர்கொழும்பு பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் கான்ஸ்டபிள்கள் இருவர் பலியான சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காரின் சாரதியை எதிர்வரும் 25 ஆம் திககதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் கபில துஸ்ஸந்த (11) உத்தரவிட்டார்.

ஹர்ஸ இந்திரஜித் வடுகே என்பவரே விளக்கமறியலில் வைக்குமாறு உத்ரவிடப்பட்டவராவார். விபத்து இடம்பெற்ற வேளையில் சந்தேக நபர் அதிக மதுபோதையில் இருந்துள்ளமையும் வாகனத்தை பந்தயத்திற்கு செலுத்தியுள்ளமையும் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

விபத்தில் மரணமான பொலிஸார் இருவரும் மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்றிருந்ததாகவும், விசாரணை இன்னும் நிறைபெறவில்லை எனவும் மன்றில் தெரிவித்த நீர்கொழும்பு பொலிஸார் சந்தேக நபருக்கு பிணை வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

இந்த விபத்துச் சம்பவத்தில் மரணமடைந்தவர்கள்; ஆணமடுவையைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான அசோக்க லலித் யசநாயக்க (39 வயது) , தங்கொட்டுவையைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான சமிந்த பண்டார (32 வயது) என்ற பொலிஸ் கான்ஸ்டபிள்களாவர்.

வுpபத்தில் பலியான இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நீர்கொழும்பு நகரெங்கும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களின்; படங்களை தாங்கிய பதாகைகளை பிரதேச மக்கள் காட்சிக்கு வைத்துள்ளனர்.

இந்த விபத்தில் மரணமான அசோக்க லலித் யசநாயக்க என்ற பொலிஸ் உத்தியோகத்தர் பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் பொது மக்கள் மத்தியிலும் பெரும் பிரபல்யம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தத்கது.

( எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 97 posts in News category
Recommended for you
foot ball
13 வயதுக்கு கீழ்பட்ட வயதுப் பிரிவு உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்nயில் நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரி அணி சாம்பியன்

நீர்கொழும்பு சென் மேரிஸ் கல்லூரி நடத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில்  13 வயதுக்கு கீழ்பட்ட வயதுப் பிரிவிற்கான போட்டியில் நீர்கொழும்பு...