53

நீர்கொழும்பில் பாடசாலை மாணவனை கடத்திச் செல்ல முற்பட்ட சம்பவம்: சந்தேக நபர்கள் ஐவரையும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு  

150x728

 

53நீர்கொழும்பு நகரில் உள்ள பிரபல பௌத்த பாடசாலை  ஒன்றின் உயர்தர வகுப்பு மாணவனை தாக்கி  வாகனத்தில் கடத்திச் செல்ல முயற்சி செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரையும்  இந்த மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த   வியாழக்கிழமை (20) உத்தரவிட்டதோடு,  அன்றைய தினம் சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

 

தினேஸ் ஜிஹான், மஞ்சுள புஸ்பகுமார, தசுன் சமீர, கயான் சஞ்சீவ, சுசித்த பிரசன்ன த சில்வா ஆகியோரே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவர்களாவர்.

 

கடந்த புதன்கிழமை (19) நீர்கொழும்பு ஹரிச்சந்திர தேசிய பாடசாலை முன்பாக  பாடசாலை முடிவடைந்து வீடு செல்வதற்காக காத்திருந்த  மாணவன்  வான் ஒன்றில் கடத்திச் செல்லப்படும் போது வீதி போக்குவரத்து சேவையில் பணியில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் பிறிதொரு மாணவன் அறிவித்ததை அடுத்து அந்த பொலிஸ் உத்தியோகத்தரால் மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்று காப்பாற்றப்பட்டார். தாக்குதலுக்கு உள்ளான மாணவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் பின்னர் அனுமதிக்கப்பட்டார்.  அன்றைய தினம் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். நீர்கொழும்பு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு மேலும் இருவரை கைது செய்தனர்.

 

150x728
More 8 posts in Education category
Recommended for you
64
நீர்கொழும்பில் வெசாக் தானசாலைகள் பொது சுகாதார பரிசோதகர்களால் சோதனை

. நீர்கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட  பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள வெசாக் தானசாலைகளை மாநகர சபையின் பொது...