55

நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற  20 இலட்சம் ரூபா பெறுமதியான  வாகனம் கேகாலை பிரதேசத்தில் அடகு வைக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால்  மீட்பு  

150x728

(நீர்கொழும்பு நிருபர் – எம்.இஸட்.ஷாஜஹான்)

    

வாடகைக்கு பெற்ற  20 இலட்சம் ரூபா பெறுமதியான  நவீன ரக வேன் ஒன்றை மோட்டார் வாகன பதிவுச் சான்றிதழ் உட்பட போலி ஆவணங்களை தயாரித்து கேகாலை பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவருக்கு அடகு வைத்த நிலையில் மீட்டதாக  நீர்கொழும்பு பிராந்திய சட்டத்தை நிலை நிறுத்தும் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.ஆர்.ஏ. ஜி. மனோகர இன்று (20) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

55கைப்பற்றப்பட்டடுள்ள வாகனத்தை நீர்கொழும்பு பெரியமுல்லை பிரதேசத்தில்  உள்ள வாடகைக்கு வாகனங்களை வழங்கும்  நிலையத்தில் தெரணியகல பிரதேசத்தைச் சேர்ந்த நிலன்க சம்பத் விNஐகோன் என்பவர் வாடகைக்கு பெற்றுள்ளார். நிலன்கவை பெரியமுல்லை பிரதேசத்தில்  உள்ள வாடகைக்கு வாகனங்களை வழங்கும்  நிலையத்தின் உரிமையாளருக்கு  அறிமுகப்படுத்தி வைத்துள்ளவர் முன்னர் நீர்கொழும்பு பொஸ்கோபுரவில்  வசித்த  பாபு என்று அழைக்கப்படும் ஆறுமுகன் பாலச்சந்திரன்  என்பவராவார்.

நிலன்க சம்பத் விNஐகோன் என்ற சந்தேக நபர் போலி ஆவணங்களை தயாரித்து வாகனங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டவராவார் என பொலிஸார் மேற்கொண்ட விசிhரணைகளின் போது தெரிய வந்துள்ளது என்றார்.

நிலன்க சம்பத் விNஐகோனை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பாபு எனப்படும் ஆறுமுகன் பாலச்சந்திரனை பொலிஸார் மன்றில் ஆஐர் செய்யவுள்ளதாக பொலிஸார்  மேலும் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பியலால் தசநாயக்கவின் ஆலோசனையின் பேரில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் லலித் ரோஹன கமகேயின் வழிகாட்டலில் சட்டத்தை நிலை நிறுத்தும் பிரிவின் பொறுப்பதிகாரி  பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.ஆர்.ஏ. ஜி. மனோகர தலைமையில்   பொலிஸ் பரிசோதகர்களான  எம். ரஹுப், எச்.எம்.சந்தன,  டெனி பெரேரா, கான்ஸ்டபிள்களான அமல், ஜயசிங்க , சமித்  ஜயசேகர ஆகியோர்   மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

150x728
More 118 posts in News category
Recommended for you
3
 ஒரு மாத காலமாக   பெரியமுல்லையில் தேங்கி கிடந்த குப்பை அகற்றப்பட்டது : பிரதேசவாசிகள் நன்றி தெரிவிப்பு

நீர்கொழும்பு, பெரியமுல்லை லாஸரஸ் வீதியில் கடந்த ஒரு மாத காலமாக அகற்றப்படாமலிருந்த குப்பைகளை நீர்கொழும்பு மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவினர்...