81

 நீர்கொழும்பு கட்டுவ பிரதேசத்தில் நத்தார் தினத்தன்று  இடம்பெற்ற வாகன விபத்தில் 54 வயதுடைய நபர் பலி

150x728

நீர்கொழும்பு கட்டுவ பிரதேசத்தில் நத்தார் தினத்தன்று  இரவு  இடம்பெற்ற வாகன விபத்தில் 54 வயதுடைய நபர் ஒருவர்  பலியாகியுள்ளார்.

கட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த சுனிமல் போல்பெர்னாந்து என்பவரே சம்பவத்தில் பலியானவராவார்.

சம்பவத்தில் பலியான நபர் துவிச்சக்கர வண்டியை தள்ளிக்கொண்டு  பாதையில் சென்று கொண்டிருந்தபோது  சிலாபம் திசையை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளில் மோதி .ந்த விபத்து இடம்பெற்றுள்ளமை விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த நீர்கொழும்பு சில்வஸ்டர் வீதியைச் செர்ந்த ஏ. டெனிவனில் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்;கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சமன்திலக்க வெலிவிட்டவின் மேற்பார்வையின் கீழ் போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் கஜநாயக்க இந்த விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளார்.

சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

( எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 79 posts in News category
Recommended for you
 38 வருட கால சேவையிலிருந்து ஓய்வுபெறும் நீர்கொழும்பு கோட்டக் கல்விப் பணிப்பாளருக்கு பிரியாவிடை

கல்வித்துறையில் 38 வருட காலம் பணியாற்றி பல்வேறு பதவிகள் வகித்து சேவையிலிருந்து ஓய்வுபெறும் நீர்கொழும்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜி.ஏ.ஏ....