heroin

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஹெரோயின் கொண்டு செல்ல முயன்ற நபர் கைது

150x728

 

 

heroin

 

 

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள்  கைதி ஒருவருக்கு கொடுப்பதற்காக ஹெரோயின்  போதைப் பொருளை கொண்டு செல்ல முயன்ற நபர்  ஒருவரை சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று  (18) கைது செய்து நீர்கொழும்பு ஊழல் ஒழிப்புப் பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கொந்தராதூவ, ஹொரம்பொல்ல, மினுவாங்கொட பிரதேசத்தைச சேர்ந்த மெரகல் பேடிகே நுவன் மதுசங்க (26 வயது) என்பவரே கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபராவார்.

சந்தேக நபரிடமிருந்து 4 கிரேம், 621 மில்லி கிரேம் ஹெரோயின் போதைப் பொருளும் 8 கிராம், 70 மில்லி கிராம் கஞ்சாவையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு கொடுப்பதற்காக பிளாஸ்ரிக் ஐஸ்கிரீம் கப் ஒன்றில் சமைக்கப்பட்ட பருப்பை கொண்டு சென்றுள்ளார். சிறைச்சாலை பாதுகாப்பு  உத்தியோகத்தர் ஒருவர் சந்தேகம் கொண்டு அதனை சோதனை செய்தபோது அதில் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து போதைப பொருள் கொண்டு செல்ல முறபட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரை மன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

( எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 109 posts in News category
Recommended for you
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் இயங்கவில்லை

 அரச வைத்திய அpகாரிகள் சங்கம் இன்று  நாடளாவிய ரீதியில் நடத்திய பணிபகிஷ்கரிப்பு காரணமாக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு ...