unnamed (3)

நீர்கொழும்பு ‘தெபா எல’ சுத்தம் செய்யப்படாமை தொடர்பாக பிரதேசவாசிகள் விசனம்:  மழை காலங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம்

150x728

   unnamed (4)நீர்கொழும்பு ‘தெபா எல’ சுத்தம் செய்யப்படாமை தொடர்பாக பிரதேச மக்கள் மாநகர சபைக்கு எதிராக குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

பிரதேசவாசிகளால் ‘திய ஒந்த எல’ என அழைக்கப்படும்  ‘தெபா எல’ கடந்த ஒரு வருட காலமாக சுத்தம் செய்யப்படாமை காரணமாக தண்ணீரில் தாவரங்கள் வளர்ந்து காணப்படுவதாகவும், பிளாஸ்ரிக் போத்தல்கள், குப்பைகள் நிறைந்து காணப்படுவதாகவும் இதன் காரணமாக நுளம்பு பெருக்கம் அதிகம் உள்ளதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.unnamed (3)

நகரில் பல நூற்றுக் கணக்கானோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை டெங்கு காய்யச்சலினால் பாதிக்கப்பட்டவர்களினால் நிரம்பியுள்ளது. ஒரு கட்டிலில் இரண்டு நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடந்த மூன்று மாத காலத்தில் நீர்கொழும்பு மாhவட்ட வைத்தியசாலையில் ஐந்து டெங்கு நோயாளிகள் இறந்துள்ளனர்.

இந்நிலையில் ‘திய ஒந்த எல’ என அழைக்கப்படும்  ‘தெபா எல’ சுத்தம் செய்யப்படாவிட்டால் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும்,  மழை தொடர்ந்து பெய்தால் இந்த ஓடை  ஊடறுத்துச் செல்லும் நீர்கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசங்களான ரப்பர் வத்தை, சேனை, தெனியாயவத்தை,  செல்ல கந்த,  பெரியமுல்ல லாஸரஸ் வீதி,  தளுபத்தை, கட்டுவ, குடாபாடுவ உட்பட பல பிரதேசங்களிலும் வசிக்கும் மக்கள் வெள்ள நீரினால் பாதிக்கப்படுவர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

unnamed (2)கடந்த காலங்களில் ‘திய ஒந்த எல’ சுத்தம் செய்யப்படாமை காரணமாக இப்பிரதேசங்கள் வெள்ள நீரி;ல் மூழ்கியதாகவும், மக்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவும்  பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

‘திய ஒந்த எல’ என அழைக்கப்படும்  ‘தெபா எல’ வில் பிரதேசவாசிகள் சிலர் குப்பைகளை கொட்டுவதாகவும், இந்த ஓடை செல்லும் பகுதியில் சட்டவிரோத கட்டடங்கள் மற்றும் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும் பிரதேச முக்கியஸ்த்தர்களும், அரசாங்க அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.

தொடர்ச்சியாக மழை பெய்தால் நீர்கொழும்பு நகரின் மேற்குறிப்பிட்ட பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. அதற்கு முன்னர் ‘திய ஒந்த எல’ சுத்தம் செய்ய நீர்கொழும்பு மாநகர ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சகலரதும் கோரிக்கையாகும்

( எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728

There are no comments yet

Why not be the first

Leave a Reply

More 118 posts in News category
Recommended for you
3
 ஒரு மாத காலமாக   பெரியமுல்லையில் தேங்கி கிடந்த குப்பை அகற்றப்பட்டது : பிரதேசவாசிகள் நன்றி தெரிவிப்பு

நீர்கொழும்பு, பெரியமுல்லை லாஸரஸ் வீதியில் கடந்த ஒரு மாத காலமாக அகற்றப்படாமலிருந்த குப்பைகளை நீர்கொழும்பு மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவினர்...