2

நீர்கொழும்பு பெரியமுல்லையில் நடைபெற்ற டெங்கு காய்ச்சலிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான இலவச ஹோமியோபதி வைத்திய முகாம்

150x728

1

அரசாங்க ஹோமியோபதி வைத்தியசாலையின் குருணகால மருத்துவமனையுடன் இணைந்து நீர்கொழும்பு அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தினர் நடத்திய டெங்கு காய்ச்சலிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான   இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை  (14-5-2017) பெரியமுல்லையில் இடம்பெற்றது.

டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருந்துகளும் மற்றும் இந்த காய்ச்சலினால்; பாதிக்கப்படுவதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான   நோய் தடுப்பு மருந்துகளும் வைத்தியர்களான எம்.எப். பயாஸ் அஹ்மத், ஆர். ஏ. ஒஸாமா அஹ்மத் ஆகியோரினால் வழங்கப்பட்டன.

2இந்நிலையில் இலவசமாக நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் பல நூற்றுக் கணக்காணோர் பங்குபற்றி மருந்துக்களைப் பெற்றுக் கொண்டனர்.

நீர்கொழும்பு பொது சுகாதார பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில்  கடந்த நான்கு மாத காலப் பகுதியில் 536 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைச் பெற்றுள்ள நிலையில் அவர்களில் மூவர் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர். அத்துடன் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுள்ளனர்.

படம் – டெங்கு காய்ச்சலிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான   இலவச ஹோமியோபதி தடுப்பு மருந்துக்களை பொது மக்கள் பெற்றுக் கொள்வதையும், சிகிச்சைக்காக வந்தோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்

( எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728

There are no comments yet

Why not be the first

Leave a Reply

More 109 posts in News category
Recommended for you
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் இயங்கவில்லை

 அரச வைத்திய அpகாரிகள் சங்கம் இன்று  நாடளாவிய ரீதியில் நடத்திய பணிபகிஷ்கரிப்பு காரணமாக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு ...