13

படுகொலை செய்யப்பட்ட மினுவாங்கொட பாதாள உலகத் தலைவர் பிரடி சில்வாவின் கொலையுடன் தொடர்புடைய 7 பேர் கைது: வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்பு

150x728

 

13படுகொலை செய்யப்பட்ட மினுவாங்கொட உன்னாருவ பிரதேசத்தில் இயங்கி வந்த பாதாள  கோஸ்டியின் தலைவர் சுசந்த பிரடி சில்வா எனப்படும் பிரடியின்  கொலையுடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுளளதுடன் மேலும் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்   நீர்கொழும்பு பிராந்திய சட்டத்தை நிலை நிறுத்தும் பிரிவின் பொறுப்பதிகாரி  பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.ஆர்.ஏ. ஜி. மனோகர நேற்று (4) தெரிவித்தார்.

வேன் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் லேன்ட் மாஸ்டர் டிரக்டர்  வண்டி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் வழங்கிய தகவலின் பேரில் மேலும் ஒரு சந்தேக நபரிடமிருந்து மூன்று துப்பாக்கிக12ளையும்  பொலிஸார் மீட்டுள்ளனர்.

பாதாள  கோஸ்டியின் தலைவர் பிரடியின்  கொலையுடன் தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு அந்த நபரிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுயள்ளன.

மினுவாங்கொட, உன்னாருவ பிதேசத்தைச் சேர்ந்த நிலந்த ஜயசிறி மென்டிஸ் (34 வயது),  விமானப்படையில் 12  வருடங்கள் சேவையாற்றிவிட்டு ஓய்வு பெற்ற  பொல்கெட்டிய பேனதுவ, கொடகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த கோப்ரல்  சிசிர குமார அழகக்கோன் (40 வயது), மினுவாங்கொட, உன்னாருவ பிதேசத்தைச் சேர்ந்த சந்தன என்று அழைக்கப்படும் தியாகுகே சிறியந்த பிரதீப் சிறிபால சில்வா (34 வயது), மினுவாங்கொட, உன்னாருவ பிதேசத்தைச் சேர்ந்த லலந்த என்று அழைக்கப்படும்  முச்சக்கர வண்டி சாரதியான தியாகுகே சுஜித் பிரசன்ன சில்வா (34 வயது), டிரக்டர் சாரதியான மினுவாங்கொட, உன்னாருவ பிதேசத்தைச் சேர்ந்த ரேந்த ஹந்திகே திலான் சமந்த சில்வா (32 வயது),  மடவளை, மினுவாங்கொடையைச் சேர்ந்த  விமான நிலைய டாக்ஸி சாரதியான  ரேந்த ஹந்திகே வசந்த பிரியலால் சில்வா (43 வயது) ஆகியோரே கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் ஆவர்.

ஆயதங்களை வைத்திருந்த சந்தேக நபர்  தாகொனன வீதி, நீர்கொழுமபைச் சேர்ந்த இத்தமல்கொட  முனசிங்க  முனியான்சலாகே  நிரஞ்சன் லக்மால் என்பவராவார்.

கொடகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த கோப்ரல்  சிசிர குமார அழகக்கோன் (40 வயது) என்பவரே பணத்தைப் பெற்றுக் கொண்டு; பாதாள  கோஸ்டியின் தலைவர்; பிரடி சில்வாவை கொலை செய்தவராவார் என விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

விசாரணைகளின் போது மேலும் தெரிய வந்துள்ளதாவது

கொலை செய்யப்பட்ட பாதாள உலகத் தலைவர் பிரடிக்கும்  நிலந்த மென்டிசுக்கும் இடையில் வேன் ஒன்றை வாங்கியமை தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நிலந்த மென்டிசின் பெயரில் பிரடி வாங்கிய வேனை நிலந்த மென்டிஸ் விற்பனை செய்துள்ளார். இதன் காரணமாக பாதாள கோஸ்டித் தலைவர் பிரடி நிலந்த மென்டிசின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாரை தாக்கியுள்ளதுடன் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார். விறபனை செய்த வேனுக்கு பதிலாக நிலந்த மென்டிஸின் வீட்டையும் காணியையும் தனது பெயருக்கு எழுதிக் கேட்டுள்ளார்.

பின்னர் ஒரு தினத்தில் நிலந்த மெண்டிஸின் தாயாரையும் அக்காவையும் கொலை செய்வதற்கு பிரடி திட்டம் போட்டுள்ளார். இதன் காரணமாக பிரடியை கொலை செய்ய நிலந்த மெண்டிஸ் திட்டமிட்டுள்ளார.;  இதற்காக தனது சகோதரரையும் இணைத்துக் கொண்டுள்ளார்.

இதன் அடிப்படையில் பொல்கெட்டிய பேனதுவ, கொடகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த கோப்ரல்  சிசிர குமார அழகக்கோன்  என்பவரை மடவளை, மினுவாங்கொடையைச் சேர்ந்த  விமான நிலைய டாக்ஸி சாரதியான  ரேந்த ஹந்திகே மூலமாக ஒப்பந்த அடிப்படையில் கொலை செய்வதற்கு அமர்த்தி இந்த கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டிரக்டர் சாரதியான மினுவாங்கொட, உன்னாருவ பிதேசத்தைச் சேர்ந்த ரேந்த ஹந்திகே திலான் சமந்த சில்வா (32 வயது), இந்த கொiயை மேற்கொள்வதற்கு பிரடி சில்வாவின் நடமாட்டம் தொடர்பாக உளவு பார்த்தவராவார். இவர் வழங்கிய தகவலை அடுத்தே பிரடி அவரது வீட்டுக்கு முன்பாக  24-11-2016 அன்று சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள ஆறு சந்தேக நபர்களை மினுவாங்கொடை பொலிஸில் ஒப்படைக்கவும், ஆயுதங்கள் வைத்திருந்த சந்தேக நபரை  கட்டானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் அந்த பொலிஸ் நிலையங்களால் மன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

நீர்கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பியலால் தசநாயக்கவின் ஆலோசனையின் பேரில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் லலித் ரோஹனவின் வழிகாட்டலில் சட்டத்தை நிலை நிறுத்தும் பிரிவின் பொறுப்பதிகாரி  பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.ஆர்.ஏ. ஜி. மனோகர, பொலிஸ் பரிசோதகர்களான  எம். ரஹுப், எச்.எம்.சந்தன,  டெனி பெரேரா, கான்ஸ்டபிள்களான அமல், ஜயசிங்க , சமித்  ஜயசேகர, நீர்கொழும்?பு பொலிஸ் நிலைய  விசேட செயல்பாட்டுப் பிரிவின்  பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர ரோஹன புஸ்பகுமார  ஆகியோர்  இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

எம்.இஸட்.ஷாஜஹான்

150x728
More 118 posts in News category
Recommended for you
3
 ஒரு மாத காலமாக   பெரியமுல்லையில் தேங்கி கிடந்த குப்பை அகற்றப்பட்டது : பிரதேசவாசிகள் நன்றி தெரிவிப்பு

நீர்கொழும்பு, பெரியமுல்லை லாஸரஸ் வீதியில் கடந்த ஒரு மாத காலமாக அகற்றப்படாமலிருந்த குப்பைகளை நீர்கொழும்பு மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவினர்...