பெண்ணின் தங்கச் சங்கிலியை பறித்த சந்தேக நபர்கள் இருவர் கைது

150x728

12

 

 கிம்புலாபிட்;டிய இத்தகொடலல பிரதேசத்தில் பெண் ஒருவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச சங்கிலியை கொள்ளையிட்டுச் சென்ற சந்தேக நபர்கள் இருவரை கைத  செய்த கட்டானை பொலிஸார் நீதிமன்றில் ஆஜர் செய்தபோது சந்தேக நபர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இத்தகொடலல பிரதேசத்தில் உள்ள கடையொன்றுக்குஇரு சந்தேக நபர்களும் மோட்டார் சைகக்கிள் ஒன்றில்;  சென்றுள்ளனர். அதில் ஒரு நபர் கடையிலிருந்த பெண்ணிடம் பேக்கரி உணவு கேட்டுள்ளார். அந்த பெண் பேக்கரி உணவை வழங்குவதற்காக தயாரானபோது, சந்தேக நபர் அந்த பெண்ணின் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மற்றைய சந்தேக நபர் தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி இருவரும்   அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

கட்டானை பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யட்டியன பில்லேவத்தையைச் சேர்ந்த அமில சம்பத், ரத்தொழுவகமை பிரதசத்தைச் சேர்ந்த தினேஸ் ரங்கன குமார ஆகிய இருவரே கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களாவர். சந்தேக நபர்கள் இருவரும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்பது விசாரணைகளின போது தெரிய வந்துள்ளது.

( எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 74 posts in News category
Recommended for you
20
 சிறை வைக்கப்பட்டிருந்த நிலையில் மரணமான பொலிஸ் பரிசோதகரின் பிரேதத்தை பெற உரிமை கோரிய இரண்டு பெண்கள்

ஜா-எல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்குள் நுழைந்து  துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பாக  குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த...