79

மோட்டார் சைக்கிளில் பயணித்து ஹெரோயின் போதைப் பொருளை விநியோகித்து வந்த நபர் நீர்கொழும்ப பொலிஸாரால் கைது : 3118 மில்லி கிராம் போதைப் பொருள் மீட்பு

150x728

79நீண்ட காலமாக  மோட்டார் சைக்கிளில் பயணித்து ஹெரோயின் போதைப் பொருளை விநியோகித்து வந்த நபர் ஒருவரை  சீதுவை தடுகம பாலம் அருகில் வைத்து 3118 மில்லி கிராம் போதைப் பொருளுடன்  நீர்கொழும்பு சட்டத்தை நிலை நிறுத்தும் பிரிவு பொலிஸார்  நேற்று (17) கைது செய்துள்ளனர்.

வத்தளை பொலிஸ் பிரவிற்குட்பட்ட நீர்கொழும்பு வீதி, பேலியாகொடை பிரதேசத்தைச் சேர்ந்த வீரமுனி ஆராச்சிகே    எரந்த பியத்திலக்க என்ற 28 வயதுடைய  திருமணமாகாத நபரே கைது செய்யப்பட்டவராவார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்  போதைப் பொருள் வாங்குவது போன்று போலியாக நடித்து  சந்தேக நபரை  தடுகம பிரதேசத்திற்கு வரவழைத்து கைது செய்துள்ளனர்.  சந்தேக நபரிடமிருந்து 40 போதைப் பொருள் பக்கற்றுக்களையும் போதைப் பொருளை விநியோகிப்பதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும்  பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.80

சந்தேக நபர் போதைப் பொருளை  சிறிய பக்கற்றுக்களாக  பிரித்து ஒரு பக்கற்றை ஆயிரம் ரூபாவுக்சு நீர்கொழும்பு மற்றும் கட்டனை பிரதேசங்களில் விற்பனை செய்து வந்துள்ளயமையும்,  சந்தேக நபர் போதைப் பொருள் விற்பனை செய்தமை தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு முன்னரே பிணையில் விடுதலையாகியுள்ளமை விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

நீர்கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பியலால் தசநாயக்கவின் ஆலோசனையின் பேரில் சட்டத்தை நிலை நிறுத்தும் பிரிவின் பொறுப்பதிகாரி  பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.ஆர்.ஏ. ஜி. மனோகர, பொலிஸ் பரிசோதகர்களான  ஏ.எம். ரஹுப், தர்மப்பிரிய,  எச்.எம்.சந்தன,  டெனி பெரேரா, கான்ஸ்டபிள்களான அமல், சிந்தக , சமித், பொலிஸ் சாரதி  ஜயசேகர ஆகியோர்  இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்  மேலதிக விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர் செய்வதற்காக  சீதுவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளா

(- எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 118 posts in News category
Recommended for you
3
 ஒரு மாத காலமாக   பெரியமுல்லையில் தேங்கி கிடந்த குப்பை அகற்றப்பட்டது : பிரதேசவாசிகள் நன்றி தெரிவிப்பு

நீர்கொழும்பு, பெரியமுல்லை லாஸரஸ் வீதியில் கடந்த ஒரு மாத காலமாக அகற்றப்படாமலிருந்த குப்பைகளை நீர்கொழும்பு மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவினர்...