76

விமல் வீரவங்ச மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

150x728

 

76   சட்டரீதியற்ற கடவுச்சீட்டைப் பயன்படுத்தி  கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக வெளிநாடு செல்ல முற்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக  முன்னாள் அமைச்சர்  விமல் வீரவங்சவுக்கு  எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை (16)  நடைபெற்றபோது  நீர்கொழும்பு மேலதிக நீதவான் கபில துஸ்ஸந்த எபிட்டவல இந்த வழக்கை  விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்காக   எதிர்வரும் செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

  பாராளுமன்ற உறுப்பினர்  விமல் வீரவங்ச இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது மன்றில் ஆஜராகியிருந்தார்.  பாராளுமன்ற உறுப்பினர்  விமல் வீரவங்சவின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க  தலைமையிலான சட்டத்தரணிகள் மன்றில் ஆஜரானார்கள்

முறையற்ற கடவுச் சீட்டைப் பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச வெளிநாடு செல்ல வருகை தந்தபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் திகதி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

வெளிநாடு செல்வதற்காக பல வருடகாலமாக  தான் பயன்படுத்தி வந்த கடவுச்சீட்டு காணாமல் போனதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து, பின்னர் புதிய கடவுச் சீட்டைப் பெற்றுள்ளதோடு பழைய கடவுச்சீட்டை ரத்துச் செய்துள்ளார். பின்னர் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் திகதி   டுபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் வந்தபோது காணாமல் போனதாகக் கூறப்பட்ட கடவுச் சீட்டை  அவர் சமர்ப்பித்துள்ளார் என கூறப்படுகிறது

( எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 118 posts in News category
Recommended for you
3
 ஒரு மாத காலமாக   பெரியமுல்லையில் தேங்கி கிடந்த குப்பை அகற்றப்பட்டது : பிரதேசவாசிகள் நன்றி தெரிவிப்பு

நீர்கொழும்பு, பெரியமுல்லை லாஸரஸ் வீதியில் கடந்த ஒரு மாத காலமாக அகற்றப்படாமலிருந்த குப்பைகளை நீர்கொழும்பு மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவினர்...