விமானத்தில் சக பயணியின் 1500 டொலர் பணத்தை திருடிய சீன பிரஜைக்கு விளக்கமறியல்  

150x728

 

15 டுபாயிலிருந்து இலங்கைக்கு பயணித்துக் கொண்டிருந்த யு.எல்.226 ஆம் இலக்க விமானத்தில்   சக பயணியின் பணத்தை திருடிய சீன பிரஜையை   நீர்கொழும்பு நீதவான்   எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு  நேற்று செவ்வாய்க்கிழமை (8) உத்தரவிட்டார்.

பேன்பிஸ் என்ற பெயருடைய  26 வயதுடைய சீன பிரஜையே விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிடப்படட்டவராவார். சந்தேக நபரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

கடந்த திங்கட்கிழமை (7) டுபாயிலிருந்து இலங்கைக்கு பயணித்துக் கொண்டிருந்த யு.எல்.226 ஆம் இலக்க விமானத்தில்  சந்தேக நபர் பயணித்துள்ளார். அந்த விமானத்தில்  இலங்கையைச் சேர்ந்த நிதி நிறுவனம் ஒன்றின் உயர் அதிகாரி ஒருவரும் பயணித்துள்ளார். அந்த அதிகாரி நித்திரையில் இருந்த வேளையில் சந்தேக நபரான சீனப் பிரஜை அந்த அதிகாரியின் பயணப் பையில் இருந்த 1500 டொலர்களை திருடியுள்ளார். இதனை விமானப் பணிப் பெண் ஒருவர் கண்டு தனது அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.

விமானம் கட்டுநாயக்க விமான நிலையம் வந்த பிறகு விமான நிலைய பொலிஸாரினால் சந்தேக நபர்  கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடப்பட்ட பணமும் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் விமானங்களில்  பயணித்து பயணிகளின் பணத்தையும் உடைமைகளையும் திருடி வந்துள்ளமை விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

(எம்.இஸட்.ஷாஜஹான்)

 

150x728
More 118 posts in News category
Recommended for you
3
 ஒரு மாத காலமாக   பெரியமுல்லையில் தேங்கி கிடந்த குப்பை அகற்றப்பட்டது : பிரதேசவாசிகள் நன்றி தெரிவிப்பு

நீர்கொழும்பு, பெரியமுல்லை லாஸரஸ் வீதியில் கடந்த ஒரு மாத காலமாக அகற்றப்படாமலிருந்த குப்பைகளை நீர்கொழும்பு மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவினர்...