வெலிஹேன றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் ஒளி விழா

150x728

 நீர்கொழும்பு கல்வி வலயத்தின் கட்டானைக் கோட்டத்தைச் சேர்ந்த வெலிஹேன றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் ஒளி விழா பாடசாலை அதிபர் எம். இஸட். ஷாஜஹான் தலைமையில் இன்று புதன்கிழமை (30) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அருட் தந்தை அமில கோமிஸ், அருட் சகோதரிகள், தோப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் பிரிட்டோ மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.

dsc00375 dsc00386

படவிளக்கம்: பாடசாலை அதிபர் எம். இஸட். ஷாஜஹான்  தலைமை உரை நிகழ்த்துவதையும் அருட் தந்தை அமில கோமிஸ், தோப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் பிரிட்டோ ஆகியோர் உரையாற்றுவதையும், மாணவர்களுக்கு அருட் தந்தை அமில கோமிஸ் பரிசு வழங்குவதையும் படங்களில் காணலாம்

(எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 79 posts in News category
Recommended for you
 38 வருட கால சேவையிலிருந்து ஓய்வுபெறும் நீர்கொழும்பு கோட்டக் கல்விப் பணிப்பாளருக்கு பிரியாவிடை

கல்வித்துறையில் 38 வருட காலம் பணியாற்றி பல்வேறு பதவிகள் வகித்து சேவையிலிருந்து ஓய்வுபெறும் நீர்கொழும்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜி.ஏ.ஏ....