49

10 கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியுடைய 21 வாகனங்கள் நீர்கொழும்பு பொலிஸாரால் கைப்பற்றல்

150x728

(நீர்கொழும்பு நிருபர் – எம்.இஸட்.ஷாஜஹான்)

49

 

 வாடகைக்கு வாகனங்களை பெற்று விற்பனை செய்த அடகு வைத்த  பிரதான சந்தேக நபர் தலைமறைவு:   மேலும் சிலர் கைது

 10 கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியுடைய 21 வாகனங்கள்  நீர்கொழும்பு பொலிஸாரால் கைப்பற்றல்

 

வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நிலையங்களில் வாடகைக்கு வாகனங்களைப் பெற்று அந்த வாகனங்களை விற்பனை செய்தும் அடகு வைத்தும் ஏமாற்றியுள்ள பிரதான சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில்  10 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியுடைய 21 வாகனங்களை நீர்கொழும்பு பிராந்திய சட்டத்தை நிலை நிறுத்தும் பொலிஸ் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பாக நீர்கொழும்பு பிராந்திய சட்டத்தை நிலை நிறுத்தும் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.ஆர்.ஏ. ஜி. மனோகர ஊடகங்களுக்கு  இது தொடர்பாக தெரிவித்ததாவது,

கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும்  கொழும்பில் உளள ஐந்து நட்சத்திர ஹோட்ல்களுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நிறுவனம் ஒன்றை நடத்திவரும் கட்டுநாயக்கா, பில்லேவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் நீர்கொழும்பு பிராந்திய சட்டத்தை நிலை நிறுத்தும் பொலிஸ் பிரிவினருக்கு செய்த முறைப்பாட்டை செய்தார். அவர் செய்த முறைப்பாட்டில் தனது நிறுவனத்தில் வாடகைக்கு பெற்ற மூன்று வாகனங்களுக்கு  என்ன நடந்தது என்று தெரியவில்லை குறிப்பிட்டிருந்தார். அதேபோன்று இன்னொரு வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நிலையம் ஒன்றும்  காணாமல் போன ஐந்து வாகனங்கள் தொடர்பாக முறைப்பாடு செய்திருந்தது. இந்த இரு நிறுவனங்களிலும் வாகனத்தை வாடகைக்கு பெற்றவர்  வெயான்கொட, கஹட்டோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மத் அமானுல்லா அஹ்மத் முஸ்;ரத் (36 வயது)  என்பவர் என்பது தெரிய வந்தது. அவர் தற்போத தலைமறைவாகியுள்ள நிலையில் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேபோன்று  யக்கல பிரதேசத்தில் வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நிறுவனம் ஒன்றில் 10 வாகனங்களும் நிட்டம்புவ பிரதேசத்தில் வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நிறுவனம் ஒன்றில் 3 வாகனங்களும் காணாமல் போயுள்ளன.

இந்த வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டும், வேறு நபர்களுக்கு அடகு வைக்கப்பட்ட நிலையிலும், வாடகைக்கு விடப்பட்ட நிலையிலும்  நீர்கொழும்பிலும் அயற் பிரதேசங்களிலும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார்.

 நீர்கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பியலால் தசநாயக்கவின் ஆலோசனையின் பேரில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் லலித் ரோஹனவின் வழிகாட்டலில் சட்டத்தை நிலை நிறுத்தும் பிரிவின் பொறுப்பதிகாரி  பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.ஆர்.ஏ. ஜி. மனோகர, பொலிஸ் பரிசோதகர்களான  எம். ரஹுப், எச்.எம்.சந்தன,  டெனி பெரேரா, கான்ஸ்டபிள்களான அமல், ஜயசிங்க , சமித்  ஜயசேகர ஆகியோர்  இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

 பிரதான சந்தேக தலைமறைவாகியுள்ள நிலையில்  இச்சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் சிலர்  கைது செயயப்பட்டுள்ளதாகவும், அவர்களை மன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

படம்: நீர்கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பியலால் தசநாயக்க வாகனங்களை பார்வையிடுவதையும் மற்றும் சுற்றிவளைப்பை மேற்கொண்ட  பொலிஸாரையும்  படங்களில் காணலாம்.

150x728
More 79 posts in News category
Recommended for you
 38 வருட கால சேவையிலிருந்து ஓய்வுபெறும் நீர்கொழும்பு கோட்டக் கல்விப் பணிப்பாளருக்கு பிரியாவிடை

கல்வித்துறையில் 38 வருட காலம் பணியாற்றி பல்வேறு பதவிகள் வகித்து சேவையிலிருந்து ஓய்வுபெறும் நீர்கொழும்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜி.ஏ.ஏ....