25

 13 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற தனியார் வகுப்பு ஆசிரியருக்கு விளக்கமறியல்

150x728

தன்னிடம் ஆங்கிலம் கற்க வந்த 13 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்றதாகக் கூறப்படும் 59 வயதுடைய தனியார் வகுப்புகளை (டியூசன்) நடத்தி வரும் ஆசிரியரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் சாந்த நிரிஹெல்ல நேற்று திங்கட்கிழமை  (14) உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக கட்டானை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஏ.டி.ஏ. சமன்மலி தலைமையிலான குழுவினர் ஆரம்ப விசாரணை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

தனியார் வகுப்புகளை (டியூசன்) நடத்தி வரும் நீர்கொழும்பு, தலாதூவ வீதியைச் சேர்ந்த ஜயதிஸ்ஸ அத்தாவுட ஹெட்டி  என்பவரே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவராவார்.

25சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் இடம் நீர்கொழும்பு கதிரானை, கிறிஸ்துராஜ மாவத்தையில் உள்ள சந்தேக நபரின் வீடாகும். இந்த வீட்டில் சந்தேக நபரினால் நடத்தப்படும் தனியார் வகுப்புகளுக்கான பிரசார நடவடிக்கைகளுக்கான போஸ்டர் , பெனர் கட்டவுட் தயாரித்தல் மற்றும்  இறுவட்டுக்கள் தயாரித்தல்   என்பவை இடம்பெற்றுள்ளதோடு இரண்டு மாணவர்களுக்கு சந்தேக நபரால் ஆங்கிலம் கற்பிக்கப்பட்டு வந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற ஞாயிற்றுக்கிழமை அன்று  குறித்த ஆங்கில வகுப்புக்கு ஒரு மாணவி மாத்திரமே வந்துள்ளார். சந்தேக நபர் அந்த மாணவின் தேகத்தை தொட்டுத் தடவியுள்ளார். அச்சமடைந்த சிறுமி   அங்கிருந்து வெளியேறி அழுது கொண்டு விதி  வழியாகச்  சென்றுள்ளார்.

வீதியில் நின்ற இளைஞர் குழுவொன்று சிறுமி அழுவதற்கான காரணத்தை கேட்டுள்ளனர். இதன்போது வேன் ஒனறில் சந்தேக நபர் அங்கு வந்துள்ளார். பிரதேச மக்கள் சந்தேக நபரை தாக்கியுள்ளதோடு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பொலிஸார் சந்தேக நபரை நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

நீர்கொழும்பு பதில் நீதவான் வைத்தியசாலைக்குச் சென்று சந்தேக நபரை பார்வையிட்ட பின்னர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சந்தேக நபர் சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் பாதுகாப்பின் கீழ் நீர்கொழும்பு வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்.

( எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 74 posts in News category
Recommended for you
20
 சிறை வைக்கப்பட்டிருந்த நிலையில் மரணமான பொலிஸ் பரிசோதகரின் பிரேதத்தை பெற உரிமை கோரிய இரண்டு பெண்கள்

ஜா-எல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்குள் நுழைந்து  துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பாக  குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த...