78

850 சிசி  இன்ஜின் வலுவுடைய மோட்டார் சைக்கிளை  இணையத்தளம் மூலமாக கொள்வனவு செய்து  போலி தகட்டுடன் பயன்படுத்திய வர்த்கர் உட்பட இருவர் கைது  

150x728

7823 இலட்சம் ரூபா பெறுமதியுடைய 850 சிசி  இன்ஜின் வலுவுடைய மோட்டார் சைக்கிள் ஒன்றை இணையத்தளம் மூலமாக கொள்வனவு செய்து  போலி இலக்கத் தகட்டை  பொருத்தி பயன்படுத்தி வந்த நீர்கொழும்பு தூவ பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரையும் இன்னொருவரையும் நீர்கொழும்பு பிராந்திய சட்டத்தை நிலை நிறுத்தும் பிரிவு பொலிஸார்  நேற்று கைது செய்துள்ளதுடன்  மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.

நீர்கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பியலால் தசநாயக்கவுக்கு கிடைத்த தகவலை அடுத்து நடவடிக்கை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்யுத்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த மோட்டார் சைக்கிளின் சந்தைப் பெறுமதி 23 இலட்சம் ரூபாவாகும். இணையத்தளத்தின் மூலமாக  பிலியந்தல பிரதேசத்தில் ஒருவரிடமிருந்து  கைது செய்யப்பட்ட வர்த்தகர்  எட்டு இலட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்துள்ளார். கைது செய்யப்பட்ட வர்த்தகர் தனது மைத்துனருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளின்; இலக்கத்தை  கொள்வனவு செய்த அதிக வலுவுடைய மோட்டார் சைக்கிளுக்கு போலி இலக்கத் தகடொன்றை தயாரித்து பயன்படுத்தியுள்ளார்  என விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

பொலிஸார் வர்த்தகரையும் அவரது மைத்துனரையும் கைது செய்துள்ளதுடன் இரு மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த மோட்டார் சைக்கிளை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் வாகன  பதிவுத் திணைக்களம் இந்த  ரக  அதிக  இன்ஜின் சக்தி  கொண்ட மோட்டார் சைக்கிளை பதிவு செய்வதில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் பரிசோதகர்களான  எம். ரஹுப், எச்.எம். சந்தன,  டெனி பெரேரா, கான்ஸ்டபிள்களான அமல், ஜயசிங்க , சமித்  ஜயசேகர ஆகியோர்  இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

சந்;தேக நபர்களை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

படம்: போலித் தகடு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களையும்,   பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளையும்  ( ஒரே இலக்கத் தகடு) பொலிஸார் பரிசோதிப்பதை படத்தில் காணலாம். 

(நீர்கொழும்பு நிருபர் – எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 118 posts in News category
Recommended for you
3
 ஒரு மாத காலமாக   பெரியமுல்லையில் தேங்கி கிடந்த குப்பை அகற்றப்பட்டது : பிரதேசவாசிகள் நன்றி தெரிவிப்பு

நீர்கொழும்பு, பெரியமுல்லை லாஸரஸ் வீதியில் கடந்த ஒரு மாத காலமாக அகற்றப்படாமலிருந்த குப்பைகளை நீர்கொழும்பு மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவினர்...